Posts

Showing posts from July, 2020

மூன்றெழுத்தும் நம் மூச்சும்  

Image
கொரோனா  இந்த மூன்றெழுத்துதான் இன்று உலகத்தை ஆட்டிப்படைத்து, மூச்ச்சுத்திணற வைத்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா என்றாலும் அடுத்த தெரு அத்தை வீடாக இருந்தாலும் யாரும் யாரையும் நேரில் சென்று சந்திக்க முடியாத ஒரு வினோத நிலை. எது வேண்டும் என்றாலும் மொபைல் போன் அல்லது லேப்டாப் தான் கதி. இந்த அழகான முப்பரிமாண வாழ்க்கையை இரு பரிமாணத்தில் மட்டும் வாழும் அவலம்.   குழந்தைகளின் பள்ளிக்கூடமும் பெற்றோர்களின் அலுவலகங்களும் அடுத்தடுத்த அறைகளில் ஜம்மென்று நடக்கின்றன. இந்த அளவுக்கு எல்லாமே கணினிமயம் ஆகிவிட்டது ஒரு சாதனைதான் என்றாலும், அதில் சில ஆபத்துகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஓடி விளையாட முடியாத பாப்பாக்களும் ஓய்ந்தே இருக்கும் பெரியவர்களும் ஒரு ஆரோக்கியமான சமூகத்தின் அங்கமாக இருக்கமுடியாது.   அலுவலகம் என்பது ஒரு தனி இடமாக இருப்பது சில எல்லைகளை வளர்க்க உதவும். 'வீட்டு விஷயங்கள் வீட்டில், அலுவலக வேலைகள் வெளியே' என்ற நிலை, பன்னாட்டு நிறுவனங்கள் நமக்கு ஆசைஆசையாய் லேப்டாப் ஏற்பாடு செய்து குடுக்கும்போதே தேயத் துவங்கின. இப்பொழுது கட்டாய Work from Home (WFH) என்ற நிலையில் எந்த ஒரு வரைமுறையும் இன்றி