செல் அளவு வாழ்க்கை
"கற்றது கையளவு" என்பது பணிவை போதிக்கும் ஒரு பழமொழி. ஆனால் இன்று நம் கையளவு இருக்கும் கைபேசி, உலகத்தின் எந்த மூலையில் எது நடந்தாலும் அதை நமக்கு உடன் தெரியப்படுத்தும் ஒரு அதிவிரைவு தூதுவனாக நம் வாழ்க்கையின் ஒரு மிக முக்கிய அங்கமாகிவிட்டது. "தெரியாது" என்ற வார்த்தையை அர்த்தமற்றதாக மாற்றுவதற்கு அவதாரம் எடுத்துள்ள Google ராக்ஷஸன், இன்றைய உலகின் மிக நூதனமான ஒரு பொருளாதார சக்தி. விஞ்ஞானம் நமது வாழ்வை மேம்படுத்த எவ்வளவு உதவுகிறதோ, அதை விட பல மடங்கு மனித வாழ்வின் தரத்தயும் போக்கையும் புரட்டிபோட்டு நமது உண்மையான அடையாளத்தை, நாம் அறியும்முன்பே மாற்றியமைக்கும் தீமையும் செய்யவல்லது. தனக்கு ஒவ்வாததை தேடி சென்று, மிகவும் கஷ்டப்பட்டு அதை தனது வாழ்க்கையின் அங்கமாக்கி, பிறகு குறைகூறும் விசித்திரமான குணம் படைத்த நமது மனிதஇனத்தின் கையில், சகலவல்லமை பொருந்திய விஞ்ஞானத்தின் (தற்போதய) கடைக்குட்டியான இன்டர்நெட்-பொருந்திய கைபேசி இருப்பது சற்று கவலைதரும் விஷயம்தான். Information Age என்று கூறப்படும் 21ஆம் நூற்றாண்டில், கணினியை மனிதனால் செய்யமுடியாததை சாதிக்க மட்டும் அல்லாமல், மனிதனை விட நே