செல் அளவு வாழ்க்கை

"கற்றது கையளவு" என்பது பணிவை போதிக்கும் ஒரு பழமொழி. ஆனால் இன்று நம் கையளவு இருக்கும் கைபேசி, உலகத்தின் எந்த மூலையில் எது நடந்தாலும் அதை நமக்கு உடன் தெரியப்படுத்தும் ஒரு அதிவிரைவு தூதுவனாக நம் வாழ்க்கையின் ஒரு மிக முக்கிய அங்கமாகிவிட்டது. "தெரியாது" என்ற வார்த்தையை அர்த்தமற்றதாக மாற்றுவதற்கு அவதாரம் எடுத்துள்ள Google ராக்ஷஸன், இன்றைய உலகின் மிக நூதனமான ஒரு பொருளாதார சக்தி. 
விஞ்ஞானம் நமது வாழ்வை மேம்படுத்த எவ்வளவு உதவுகிறதோ, அதை விட பல மடங்கு மனித வாழ்வின் தரத்தயும் போக்கையும் புரட்டிபோட்டு நமது உண்மையான அடையாளத்தை, நாம் அறியும்முன்பே மாற்றியமைக்கும் தீமையும் செய்யவல்லது. தனக்கு ஒவ்வாததை தேடி சென்று, மிகவும் கஷ்டப்பட்டு அதை தனது வாழ்க்கையின் அங்கமாக்கி, பிறகு குறைகூறும் விசித்திரமான குணம் படைத்த நமது மனிதஇனத்தின் கையில், சகலவல்லமை பொருந்திய விஞ்ஞானத்தின் (தற்போதய) கடைக்குட்டியான இன்டர்நெட்-பொருந்திய கைபேசி இருப்பது சற்று கவலைதரும் விஷயம்தான். 

Information Age என்று கூறப்படும் 21ஆம் நூற்றாண்டில், கணினியை மனிதனால் செய்யமுடியாததை சாதிக்க மட்டும் அல்லாமல், மனிதனை விட நேர்த்தியாக மனிதம் பழகும் அளவுக்கு ஆற்றல் உள்ள கருவிகளை உருவாக்குவதில் உபயோக்கிக்கிறோம். அளவுக்கு மீறினால் அமுதும் நஞ்சு; ஆனால் "அளவு எது" என்பதுகூட தெரியாமல் இன்டர்நெட் மற்றும் சமூக வலைத்தளங்களை நாம் உபயோகிப்பதன் விளைவு, நமது நேரம் விரயமாகி, உடல்நலம் மற்றும் மனநலம் சீர்குலைந்து நாம் நடைபிணங்கள் ஆவது மட்டும் அல்ல. 
மக்களின் கவனத்தயும் மனப்போக்கையும் தன்பால் ஈர்த்து, நமது புலன்களின் வாசல் வழி நமக்கு பொய்மையும் அரைகுறை உண்மையும் கலந்து குடுத்து, நமது மனதையும் அறிவையும் மெதுவாக தனக்கு ஏற்ப மாற்றி தனது சுய-லாபத்திற்காக நம்மை பயன்படுத்தும் பல சக்திகள் உண்டு. அவர்கள் யார் என்று தெரியாமல் நாம் வரைமுறையின்றி இன்டர்நெட்டை பயன்படுத்துவது, அந்த தீயசக்திகளை ரத்தின கம்பளம் போட்டு நமது வரவேற்பறையில் அமரவைப்பதற்கு ஈடு.
இதுவும், இன்னும் பலதும், விரைவில்...

Comments

Unknown said…
Very good start! Way to go.
Thanu said…
அருமை! மேலும் எழுதவும்! கைபேசி மற்றும் இதர சாதனங்களை முறையாக உபயோகிக்கும் உக்திகளையும், இச்சாதனங்களை உபயோகிக்காமல் இருக்கும் தருணங்களை உருவாக்கிக் கொள்வது பற்றியும் எழுதலாமே

Popular posts from this blog

"எதுக்கு பயப்படணும் ?"

சென்னையில் ஒரு மழைக்காலம் (Monsoon in Chennai)

A generation that dared to dream