எனது முதல் தமிழ் கவிதை

(இது நான் சென்ற வருடம் Munich to Amsterdam பஸ் பயணம் செல்லும்போது எழுதினது, இங்கே பதிவு செய்ய விட்டுபோய் விட்டது.) 

பஸ் ஜன்னலின் வெளியை லேசான மழை தூறல்,
கேசம் கலைக்கும் மெல்லிய காற்று.
இளங்கருப்பு மேகங்களால் சிகரம் தெரியாத மலைகள்,
அடுக்கு அடுக்காய் தீப்பெட்டி போல வீடுகள் கொண்ட பெயர் தெரியாத கிராமங்கள்.

பச்சை புல்வெளியை மீறி திமிறி வளரும் நெருப்பு மஞ்சள் பூக்கள்,
என் எழுத்து பாதிக்காதவண்ணம், 
பேருந்து வெண்ணையாய் வழுக்கிசெல்ல வழிசெய்யும் சாலை.
செவியில் சுவையாக ஷங்கர் மகாதேவன்.

மனதில் இந்த ஜேர்மன் நாட்டு அழகை எனது தாய்நாட்டுடன்
உடனே ஒப்பிட்டு பார்க்கதூண்டும் பழைய நினைவுகள்.
இவை அனைத்தையும் ஒருசேர நெஞ்சில் நிறுத்தியும் 
இறகுபோல் லேசாக இருக்கும் இதயம். 

எனது இந்த அனுபவத்தை நேர்த்தியாக இயக்கிகொண்டுஇருக்கும்
இறைவா, எல்லா புகழும் உனக்கே.

பி.கு: நல்ல தலைப்பு கிடைத்தால் சொல்லவும்.

Comments

Popular posts from this blog

Chariot on Fire

The Weight of Departure

Drawn in Grit