பந்தி மாறிப் போச்சு!
சமீபத்தில் 2-3 திருமணங்களில் இரண்டு நாட்களும் பங்கேற்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அப்பொழுது பந்தி சாப்பாடு கடந்த சில வருடங்களாகவே எப்படி மாறியிருக்கிறது என்று யோசிக்க வைத்தது. ஒரு சாப்பாட்டு வரிசையில் 30-40 பேர் உட்கார முடியும். ஆனால் 6-7 பேர் வந்துவிட்டாலே ‘வாங்க வாங்க’ என்று அமர்த்தி, அவர்களைச் சிறிதும் காக்க வைக்காமல் உடனே உணவு பரிமாற ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் சாம்பார் சாதம் சாப்பிடுவதற்குள் வேறொரு 7-8 பேர் கொண்ட குரூப் புதிதாக வந்து விடுகிறது. உடனே அவர்களைக் கவனிக்கச் சென்றுவிடுகிறார்கள் பரிமாறுபவர்கள். முதல் குரூப் “ரசம்”, “இன்னும் கொஞ்சம் கூட்டு”, “மோர் குழம்பு உண்டா” என்று கேட்டுக் கேட்டுத் திண்டாடும் நிலைமை. இதற்குள் மூன்றாவதாக ஒரு குரூப் வந்துவிட்டால், எல்லோருடைய நிலைமையும் திண்டாட்டம்தான்! ஒரு வரிசை இல்லாமல் ஐட்டங்கள் இங்கும் அங்கும் அலைபாய, தயிர் சாதத்திற்கு தயிர் பச்சடியும், ரசம் கேட்டவர் இன்னும் காத்திருக்க அதற்குள் பாயசம் வந்துவிட, இதற்குள் எங்கோ சாம்பார் சாப்பிடுபவர், “சந்தேகத்துக்கு சாம்பார் கேட்கல?” என்று கேட்க, உடனே அப்பளம் போட வந்தவர் அதை கீழே போட்டுவிட்டு...